திருக்குறள் - குறள் 689 - பொருட்பால் – தூது
குறள் எண்:
689
குறள் வரி:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
அதிகாரம்:
தூது
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்றரசர்க்கு உரைக்கும் தூதன், தனக்குச் செய்யும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குக் குற்றம் வரும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத உறுதியை உடையவனாவான்.