திருக்குறள் - குறள் 672 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 672 - பொருட்பால் – வினைசெயல்வகை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 672 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 672

குறள் வரி:

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

காலம் நீட்டித்துச் செய்யக்கூடிய செயல்களைக் காலம் நீட்டித்தே செய்க. காலந்தாழ்த்தாது செய்யக்கூடிய செயல்களைக் காலந்தாழ்த்தாது விரைந்து செய்க. கருத்து மாற்றங்களை எதிர்பார்த்தல் ஆகாது என்று ஒரு சிலரை ஒதுக்குதல் ஆகியவற்றில் காலம் நீட்டிப்பது பயன் தரலாம். "காலம் மருந்து" என்பது அனுபவ வாக்கு. ஆக்கத்தின் பாற்பட்ட பணிகள், பிறர் துன்பம் துடைக்கும் பணிகள் ஆகியவற்றில் காலம் தாழ்த்துதல் கூடாது. இந்த வகைப் பணிகளில் காலந்தாழ்த்தினால் இல்லையென்று கூறியதாகவே கருதப் பெறும். 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain