திருக்குறள் - குறள் 678 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 678 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 678 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 678

குறள் வரி:

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒரு காரியத்தைச் செய்து முடித்துக் கொள்கிற போதே, அதனோடு சேர்ந்து பிறிதொரு வினையையும் முடித்துக் கொள்ளுதல் ஓர் அரிய செயல் திறமையாகும். அது மதம் பொழியும் கன்னத்தையுடைய யானை ஒன்றைக்காட்டி அதைப்போன்ற பிறிதொரு யானையைப் பிடித்துக் கொள்வது போன்றதாகும்.

பார்வை யானையைக் காட்டினால், காட்டு யானை பின்தொடரும். அதைப் பிடிக்க இது ஒருவழி. 'கம்புக்குக் களையெடுத்தாற் போலவும் இருக்கும்; தம்பிக்குப் பெண்பார்த்தாற் போலவும் இருக்கும்' என்ற பழமொழி போன்றது இது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain