திருக்குறள் - குறள் 664 - பொருட்பால் – வினைத்திட்பம்
குறள் எண்: 664
குறள் வரி:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
அதிகாரம்:
வினைத்திட்பம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
(வினைத்திட்பம் உள்ளவர்கள் வாயால் சொன்னபடி காரியமும் செய்வார்கள்) ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிடுவது எல்லோர்க்கும் சுலபம். ஆனால் சொன்னபடி முடிப்பதுதான் அரிது.