திருக்குறள் - குறள் 663 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 663 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 663 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 663

குறள் வரி:

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமம் தரும்.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒருவன் ஒரு செயலைத் தொடங்கினால் அதை அதன் இறுதிவரையில் செய்து மீள்வதே அவனுக்கு ஆண்மையாகும். இடையிலேயே மீள்வானாயின் அஃது அவனுக்கு நீங்காத துன்பத்தையே விளைவிக்கும்.

வேறொரு பொருள்: ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாக மறைத்துச் செய்வதே வினைத்திட்பம் ஆகும். அங்ஙனமன்றி இடையில் அச்செயல் பிறருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain