திருக்குறள் - குறள் 647 - பொருட்பால் – சொல்வன்மை
குறள் எண்: 647
குறள் வரி:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
அதிகாரம்:
சொல்வன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.