திருக்குறள் - குறள் 635 - பொருட்பால் – அமைச்சு
குறள் எண்: 635
குறள் வரி:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
அதிகாரம்:
அமைச்சு
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
அறத்தை அறிந்தவனாய், தெளிந்த பேச்சாற்றல் உடையவனாய், எப்போதும் எடுத்ததை முடிக்கும் திறமை உடையவனாய் உள்ளவனே ஆட்சிக்குச் சிறந்த துணையாவான்.