திருக்குறள் - குறள் 627 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை
குறள் எண்: 627
குறள் வரி:
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
அதிகாரம்:
இடுக்கண் அழியாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
துன்பப்படுவது உடம்பின் இயல்பு எனக்
கருதும்
உயர்ந்தவர்கள், தமக்கு
வரும்
துன்பத்தைத்
துன்பமாக
நினைக்கமாட்டார்கள்.