திருக்குறள் - குறள் 597 - பொருட்பால் – ஊக்கமுடைமை
குறள் எண்: 597
குறள் வரி:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
அதிகாரம்:
ஊக்கமுடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தன் உடம்பில் அம்பு
ஆழப்
புகுந்தாலும், யானை
தன்
துன்பத்தைத்
தாங்கிப்
பகையை
எதிர்த்து
நிற்கும்;
அதுபோல்,
உறுதியான
உள்ளம்
கொண்டவர்
அழிவு
வந்தபோதும்
தளரமாட்டார்.