திருக்குறள் - குறள் 581 - பொருட்பால் – ஒற்றாடல்
குறள் எண்: 581
குறள் வரி:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண்.
அதிகாரம்:
ஒற்றாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒற்றர், சிறந்த ஒற்று நூல் இவை இரண்டையும் ஆட்சியாளன் தன் இரண்டு கண்கள் என அறிய வேண்டும்.