திருக்குறள் - குறள் 565 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை
குறள் எண்: 565
குறள் வரி:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
அதிகாரம்:
வெருவந்த செய்யாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
எளிதில் பார்க்க முடியாத
நிலையிலும்,
கடுகடுத்த
முகத்துடனும் இருப்பவன்
பெற்ற
பெரிய
செல்வம்,
பேயிடம்
அகப்பட்ட
புதையலைப்
போன்றது.