திருக்குறள் - குறள் 558 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 558
குறள் வரி:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.
அதிகாரம்:
கொடுங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நேர்மை
இல்லாத ஆட்சியாளனின் ஆட்சியில்
வறுமையை விடக் கொடிய
துன்பம், பொருள் உடையவனாக
வாழ்வதே.