திருக்குறள் - குறள் 519 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 519
குறள் வரி:
வினைக்கண் வினையுடையான் கேண்மை
வேறுஆக
நினைப்பானை நீங்கும் திரு.
அதிகாரம்:
தெரிந்து விளையாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
செய்யும் வேலையிலேயே குறியாக
இருப்பவனின் தொழிலுறவைத் தவறாக
நினைத்தால், அப்படி நினைப்பவன்
செல்வம் அழியும்.