திருக்குறள் - குறள் 509 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்
குறள் எண்: 509
குறள் வரி:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
அதிகாரம்:
தெரிந்து தெளிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆராயாமல்
யாரையும் நம்பக்கூடாது; நம்பியபின், அவர்
திறமையை அறிந்து, அதற்குரிய
தொழிலைக் கொடுக்க வேண்டும்.