திருக்குறள் - குறள் 488 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 488
குறள் வரி:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தன்னைவிட
வலிமையுடைய பகைவனைக் கண்டால்,
அவரைச்
சுமப்பது போல் இரு;
தக்க காலம் வரும்போது
அவரைக்
கவிழ்த்தல் எளிது.