திருக்குறள் - குறள் 482 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 482
குறள் வரி:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
காலம்
பார்த்து அதற்குத் தக்கபடி
செயற்படுவது, செல்வம் தன்னை விட்டுப்போகாமல் கட்டிக்காக்கும் கயிறு போன்றது.