திருக்குறள் - குறள் 463 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை
குறள் எண்: 463
குறள் வரி:
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
அதிகாரம்:
தெரிந்து செயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
இனிவரும்
வருவாயை நம்பி இப்போது
இருக்கும் முதலீட்டைப் பறிகொடுக்கும் செயலை
அறிவுடையவர் செய்யமாட்டார்.