திருக்குறள் - குறள் 454 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 454
குறள் வரி:
மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு
அதிகாரம்:
சிற்றினஞ் சேராமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒருவனுடைய
அறிவு மனத்தின் தன்மைக்கு
ஏற்ப அமைவது போலத் தோன்றினாலும், அவன்
சேர்ந்துள்ள இனத்திற்குத் தக்கவாறே அமையும்.