திருக்குறள் - குறள் 416 - பொருட்பால் – கேள்வி
குறள் எண்: 416
குறள் வரி:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
அதிகாரம்:
கேள்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
சிறிதளவேனும் நல்ல கருத்துகளைக் கேட்டல்
வேண்டும் கேட்டது சிறிய அளவானாலும் பெரிய
அளவு உயர்வு தரும்.