திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக இருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் பகுதியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சசூழல் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள்(எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் துாக்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Posts
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை!