திருக்குறள் - குறள் 503 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்
குறள் எண்: 503
குறள் வரி:
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
அதிகாரம்:
தெரிந்து தெளிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படிப்பதற்குரிய சிறந்த நூல்களை எல்லாம்
படித்துத் தெளிவு பெற்றவரிடத்தில்கூட, ஆராய்ந்து
பார்த்தால், அறிவில் குறை இருக்கும்.