திருக்குறள் - குறள் 497 - பொருட்பால் – இடனறிதல்
குறள் எண்: 497
குறள் வரி:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
அதிகாரம்:
இடனறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
எதையும்
விட்டுவிடாமல் எண்ணிப்
பார்த்து உரிய இடத்தில்
ஒரு
செயலைத் தொடங்கினால், அச்செயலுக்குத் துணிச்சல் தவிர பிற துணை தேவை
இல்லை.