திருக்குறள் - குறள் 484 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 484
குறள் வரி:
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
உரிய
காலத்தையும் இடத்தையும் அறிந்து
செயல் செய்தால், இந்த உலகத்தைத் தனதாக்க
எண்ணினும், அது கைகூடும்.