திருக்குறள் - குறள் 383 - பொருட்பால் - இறைமாட்சி
குறள் எண்: 383
குறள் வரி:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
அதிகாரம்:
இறைமாட்சி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
விழிப்போடு இருத்தல், தெளிந்த கல்வி,
நெஞ்சுரம் ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்கு நீங்காதிருக்க வேண்டிய
பண்புகள்.