திருக்குறள் - குறள் 364 - அறத்துப்பால் - அவா அறுத்தல்
குறள் எண்: 364
குறள் வரி:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
அதிகாரம்:
அவா அறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமை;
அந்த ஆசை இல்லாமையை வாய்மையால் அடையலாம்.