திருக்குறள் - குறள் 291 - அறத்துப்பால் - வாய்மை
குறள் எண்: 291
குறள் வரி:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
அதிகாரம்:
வாய்மை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
யாருக்கும் சிறிதுகூடத் தீமை தராமல்
பேசும் சொற்களே வாய்மை என்று சொல்லப்படுகிறது