திருக்குறள் - குறள் 289 - அறத்துப்பால் - கள்ளாமை
குறள் எண்: 289
குறள் வரி:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
அதிகாரம்:
கள்ளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
திருட்டைத் தவிர பிற நல்ல செயல்களை அறியாதவர், அளவு கடந்த தவறுகள் செய்து அடியோடு அழிவார்.