இன்று - September 29 - உலக இதய தினம் (World Heart Day)

இன்று - September 29 - உலக இதய தினம் (World Heart Day)

இன்று - September 29 - உலக இதய தினம் (World Heart Day)

உலக இதய தினம்

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய அறக்கட்டளையால் ஒழுங்கு செய்யப்படுகிறது.  உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடு இன்மை ஆகிய ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் 80 % அகால மரணங்களைத் தவிர்க்கலாம்.

இந்த ஆண்டு பிரச்சாரத்தின் முக்கிய நடவடிக்கைக்கான அறைகூவல் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுவது ஆகும். மேலும், செயல் ஊக்கத்துடன் இருப்பது, புகைப்பழக்கம் ஒழிப்பது, ஆரோக்கிய உணவை உண்பது, உங்கள் பிள்ளைகளை இன்னும் செயல்பாடுகளுடன் இருக்கச் சொல்லுவது, ஆகியவற்றுடன் உங்கள் அன்புக்குரியவர்களை இந்த நடவடிக்கைகளைக் கடைபிடிக்கச் செய்வது; ஒரு சுகாதாரப் பரமரிப்பாளராக மேலும் உயிர்களைக் காப்பது; ஒரு கொள்கை வடிப்பவராக பரவா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது.

இப்போதே நடவடிக்கை எடுக்கும் விழிப்புணர்வை உருவாக்க உலக இதய நாள் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும், அரசுகளுக்கும் ஒரு முக்கிய மேடையை வழங்குகிறது. இதயக்குழல் நோயால் ஏற்படும்பளுவையும் அகால மரணத்தையும் குறைக்கவும் எங்கும் வாழ்கின்ற மக்கள் நீண்ட நாள் நலமுடன் ஆரோக்கியமான இதயத்துடன் வாழ உதவவும் ஒன்றிணையும் நமக்கு ஆற்றல் இருக்கிற

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain