பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 26 உலக கருத்தடை தினமாக அறிவிக்கப்பட்டது. நிறுவனங்கள் தேவையற்ற கர்ப்பம் மற்றும் எதிர்பாராத கர்ப்பத்தை அகற்ற உறுதிபூண்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , 214 மில்லியன் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்புகிறார்கள், ஆனால் கருத்தடை தேவை இல்லை என நினைக்கிறார்கள். உலக கருத்தடை தினம் இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் கருத்தடை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
பயன்பாட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், இளைஞர்கள் தங்களின் பாலியல் மற்றும் இன விருத்த சுகாதாரத்தை பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களுக்கு உதவுவது இத்தினத்தின் நோக்கமாகும். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் உலக கருத்தடை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நிறைய கருத்தடை வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது எப்போது, எப்படி, உபயோகிப்பது என்பது பல்வேறு காரணங்களை பொறுத்து உள்ளது. சரியான கருத்தடை வழிமுறையைப் பின்பற்றினால் எதிர்பாராத கர்ப்பம், திட்டமிடாத கர்ப்பம் போன்ற எதுவும் நிகழாது.
எத்தனை வயதிருக்கும் கருத்தடை வேண்டும், தனிப்பட்ட வகையில் புகைப்பிடித்தல், உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி முதலியவற்றை பொறுத்து கருத்தடையை தேர்வு செய்ய வேண்டும். கருத்தடை செய்ய முதலில் பயன்படுத்தப்படுவது ஆணுறை. இதை மிக எளிதாக உபயோகிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாதது. பாலியல் சார்ந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மறக்காமல் ஒவ்வொரு முறையும் உறவு கொள்ளும்போதும் உபயோகிக்க வேண்டும். இரண்டாவது முறை ஹார்மோன் மாத்திரைகள். இதுவும் பாதுகாப்பானது.
நூறு சதவிகிதம் செயல்படும். இந்த மாத்திரைகளை கொண்டு கருத்தடை செய்யும் போது கருப்பை மற்றும் சினைப்பைகளில் கேன்சர் வராமல் தடுக்க முடியும். கருத்தடையை தடுக்க உட்புற கருப்பை சாதனங்களும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று காப்பர் டி இதில் சிறிய காப்பர் வளையங்கள் இருக்கும். கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் கர்ப்பத்தை தடுக்க கூடியது. இது மிகவும் பாதுகாப்பானது. இது மாடலை பொறுத்து ஐந்து, பத்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதை செலுத்தியவுடன் வரும் முதல் மாதவிடாயில் உடம்பில் உதிரப்போக்கு சற்று அதிகமாக இருக்கும். பின்னர் சரியாகிவிடும்.
இரண்டாவது வகை மிடரா. இதில் ஹார்மோன் குறை ஒன்று இருக்கும். நூறு சதவிகிதம் கர்ப்பத்தை தடுக்கும். இது போன்ற பாதுகாப்பான கருத்தடை வழிமுறைகளை பின்பற்றினால் பக்க விளைவுகள், உயிர்பலி எதுவும் இருக்காது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த உலக கருத்தடை தினத்தில் கருத்தடை குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் முறையான கருத்தடை வழிமுறைகளை பின்பற்றினால் உடல் நலனுடன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம்.