இன்று - September 21 - உலக அல்சைமர் தினம் (World Alzheimer's Day)

இன்று - September 21 - உலக அல்சைமர் தினம் (World Alzheimer's Day)

அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2021 அல்சைமர் நாளின் கருப்பொருள் ​​டிமென்ஷியாவின் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் சரியான நேரத்தில் நோயறிதலின் முக்கியத்துவத்தை நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுதல்.

கொஞ்சம் கொஞ்சமாய் மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறக்க வைத்துவிடும் இந்த அல்சைமர் நோய். 65 வயது தாண்டியவர்களை அதிகம் பாதிக்கும்.

இந்நோயைப் பற்றி முதன்முதலில் 1906 ல் ஜெர்மனியைச் சார்ந்த மருத்துவரான அலோயிஸ் அல்சைமர் உலகுக்கு எடுத்துரைத்தார்.

இந்நோயால் மூளை உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகிறது. உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் ஆறாவது  இடம் பெற்றிருக்கிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post