இன்று - September 15 - சர்வதேச மக்களாட்சி தினம் (International Day of Democracy)

 இன்று - September 15 - சர்வதேச மக்களாட்சி தினம் (International Day of Democracy)

மக்களாட்சியின் மாண்பை எடுத்துக்கூறவென்றே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அனைத்துலக மக்களாட்சி தினமாக ஐ.நா-வால் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

2007-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் நாள் ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்மூலம், இந்த நாள் 192 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என எல்லாவற்றையும்விட மக்களாட்சி சிறப்பானது என்பதாலேயே, அநேக உலக நாடுகளில் மக்களாட்சி அமலில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயலாற்றுவதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post