தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சி.என்.அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று

 தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சி.என்.அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சி.என்.அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.அண்ணா ஒரு மாபெரும் தமிழ்க்கனவை மனதில் சுமந்த அரசியல் பெட்டகம். அண்ணாதுரை என்பதுதான் இயற்பெயர் என்றபோதும், மரியாதை நிமித்தமாகவும் தன் பொறுப்புணர்வாலும் அண்ணா என்றழைக்கப்பட்டவர்.

இந்திய அரசியலில் இணை சொல்ல முடியாத பேரறிஞர் என்பதோடு, தமிழ் மக்களுக்காக முதல்முதலில் பழகுதமிழில் பொருளாதாரம் பேசிய எழுதிய பெருமகன் என்பதும் அண்ணாவின் தனிச்சிறப்பு.அமெரிக்கரல்லாத ஒருவருக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சப் ஃபெல்லோஷிப் விருது வழங்கியது என்றால் அது அண்ணாதுரைக்கு மட்டும்தான்.

ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post