4 பேர் விண்வெளிச் சுற்றுலா:Elon Musk - ன் 'Space X' நிறுவனம் சாதனை

4 பேர் விண்வெளிச் சுற்றுலா:Elon Musk - ன் 'Space X' நிறுவனம் சாதனை

4 பேர் விண்வெளிச் சுற்றுலா:Elon Musk - ன் 'Space X' நிறுவனம் சாதனை

நியூயார்க்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக 4 பேரை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நான்கு பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல் அடுத்த 3 நாட்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4 பேரை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பொதுவாக பெரிய விண்வெளி திட்டங்களுக்கு பல்கான் 9 ராக்கெட்டை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration4) மிஷன் என்று அழைக்கப்பட்ட இந்த திட்டத்தில் ராக்கெட்டின் முன் பகுதியில் நீண்ட கேப்ஸ்யூல் ஒன்று அமைந்து இருந்தது. இதில்தான் 4 பேர் கொண்ட குழு இருந்தது.

இந்த கேப்ஸ்யூல் ஸ்பேஸ்ஷிப் 575 கிமீ தூரத்தில் பூமியை சுற்றி வரும். அதாவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிருந்து 100 கிமீ மேலே இது சுற்றும். மொத்தம் 3 நாட்கள் இந்த இன்ஸ்பிரேஷன் 4 பூமியை சுற்ற போகிறது. மூன்று நாட்கள் கழித்து புளோரிடாவில் இவர்கள் தரையிறங்க உள்ளனர். விண்வெளி சுற்றுலா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த பயணம் பார்க்கப்படுகிறது. மொத்தம் ஒரு கோடீஸ்வரர் உட்பட 4 பேர் இதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜெராட் ஐசக்மேன் என்ற கோடீஸ்வரர், ஹெய்லி ஆர்ச்நாக்ஸ், சியான் ப்ரொடக்ர், கிறிஸ் செம்பரொஸ்கி ஆகிய 4 பேர் இதில் பயணம் செய்துள்ளனர்.

இன்ஸ்பிரேஷன் 4 கேப்ஸ்யூல் தானாக இயங்க கூடியது. சில கட்டுப்பாட்டுகளை பூமியில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும். மற்றபடி இதை இயக்க வேண்டிய எந்த விதமான பணியும் இவர்களுக்கு கிடையாது. ஹெய்லி ஆர்ச்நாக்ஸ், சியான் ப்ரொடக்ர், கிறிஸ் செம்பரொஸ்கி ஆகிய 4 பேரும் விண்வெளியில் சாப்பிடுவது, தூங்குவது போன்ற அனுபவங்களை பெற போகிறார்கள். விண்வெளி சுற்றுலாவின் மிகப்பெரிய படிக்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

ஜெராட் ஐசக்மேன் என்று கோடீஸ்வரர் இதில் ஒரு பயணி. இவரின் தலைமையில்தான் கடினமான போட்டிகள் மூலம் மற்ற 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வைக்கப்பட்ட போட்டிகள் குறித்து நெட்பிளிக்ஸில் டாக்குமெண்டரி கூட ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கேன்சரில் இருந்து குணமடைந்த ஹெய்லி ஆர்ச்நாக்ஸ் என்ற 29 வயது பெண் இடம்பெற்றுள்ளார்.

அதோடு கிறிஸ் செம்பரொஸ்கி என்ற முன்னாள் அமெரிக்க ஏர் போர்ஸ் வீரர், சியான் ப்ரொடக்ர் என்ற 59 வயதான புவியியல் ஆராய்ச்சியாளர் இடம்பெற்றுள்ளார். இந்த ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்க இதில் இருந்து 200 மில்லியன் டாலர் தொண்டு செயின்ட் ஜூட்ஸ் குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும். இவர்கள் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றி வருவது குறித்த அப்டேட்களை தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain