திருக்குறள் - குறள் 256 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்
குறள் எண்: 256
குறள் வரி:
தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
அதிகாரம்:
புலால் மறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தின்பதற்காக வாங்குபவர் இல்லை என்றால், புலாலை விலைக்கு விற்பவரும் இல்லையாவர்.