திருக்குறள் - குறள் 251 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்
குறள் எண்: 251
குறள் வரி:
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
அதிகாரம்:
புலால் மறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தன் உடலைப் பெருக்கவைக்கப் பிற உயிர்களின் உடலை உண்ணுபவனிடம் எப்படி அருள் பிறக்கும்?