திருக்குறள் - குறள் 244 - அறத்துப்பால் - அருளுடைமை
குறள் எண்: 244
குறள் வரி:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
அதிகாரம்:
அருளுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
உலக உயிர்களைப் பாதுகாத்து அவற்றிடம் இரக்கம் காட்டும் அருளாளர்க்கு, உயிர் அஞ்சுவதற்குக் காரணமான தீய செயல்கள் உண்டாகாது என்பர்.