திருக்குறள் - குறள் 233 - அறத்துப்பால் - புகழ்
குறள் எண்: 233
குறள் வரி:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.
அதிகாரம்:
புகழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நிலையில்லாத இந்த உலகத்தில் உயர்ந்த புகழைத் தவிர நிலையாக நிற்பது வேறொன்றும் இல்லை.