திருக்குறள் - குறள் 238 - அறத்துப்பால் - புகழ்
குறள் எண்: 238
குறள் வரி:
வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
அதிகாரம்:
புகழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தமக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால், உலகத்தில் உள்ள எவராயினும் அது அவருக்குப் பழியே.