திருக்குறள் - குறள் 247 - அறத்துப்பால் - அருளுடைமை
குறள் எண்: 247
குறள் வரி:
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
அதிகாரம்:
அருளுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் இன்பம் இல்லை; அதுபோல், அருள் இல்லாதவர்களுக்கு மேல் உலக வாழ்வு இல்லை.