திருக்குறள் - குறள் 226 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 226
குறள் வரி:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஏழைகளின் கொடிய பசியைப் போக்குக; அதுவே பொருளைச் சேமித்து வைப்பதற்குச் சமமானது.