திருக்குறள் - குறள் 213 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்
குறள் எண்: 213
குறள் வரி:
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
அதிகாரம்:
ஒப்புரவறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பிறருக்காகவே வாழ்வதைப் போன்ற நல்ல செயலை, இந்த உலகத்திலும், வேறு எந்த உலகத்திலும் காண முடியாது.