திருக்குறள் - குறள் 208 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 208
குறள் வரி:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.