திருக்குறள் - குறள் 187 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 187
குறள் வரி:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல்
தேற்றா தவர்.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மகிழுமாறு பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர், புறஞ்சொல் பேசி, சொந்த உறவுகளையும் பிரித்து விடுவர்.