திருக்குறள் - குறள் 181 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 181
குறள் வரி:
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர், அறநெறிகளைச் சொல்லாதவராகவும் அறம் அல்லாதனவற்றைச் செய்பவராகவும் இருந்தாலும், புறம் கூறாதவர் என்று சொல்லப்படுவது நல்லது.