திருக்குறள் - குறள் 179 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 179
குறள் வரி:
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அறவழியில் நின்று, பிறர் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையான் திறமைக்குத் தக்கவாறு செல்வம் சேரும்.