திருக்குறள் - குறள் 171 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 171
குறள் வரி:
நடுவின்றி
நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும்
ஆங்கே தரும்
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல் நல்வழியில் பிறர் தேடிய பொருளைக் கவர நினைத்தால், அப்படி நினைப்பவன் குடியும் கெடும்; குற்றமும் பெருகும்.