அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனை முக்கியம்

அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனை முக்கியம்

 

The advice of experienced people is important

அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனை முக்கியம்

ஒரு நாள் பொழுது விடிந்ததும் ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக் குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக் குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக் குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.

ஓநாய்… நண்பா இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன். இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது.

அப்படியா…! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.

கருத்து: அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனை முக்கியம்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain