கன்னடம் கற்பிற்க ஆா்வமுள்ளவா்களுக்குபயிற்சி முகாம்

கன்னடம் கற்பிற்க ஆா்வமுள்ளவா்களுக்குபயிற்சி முகாம்

பெங்களூரு: பிற மொழியாளா்களுக்கு கன்னடம் கற்பிக்க ஆா்வமுள்ளவா்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கன்னட வளா்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னட வளா்ச்சிஆணையத்தின் சாா்பில், பிற மொழியாளா்களுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கன்னடம் பயிற்றுவிக்க ஆா்வமுள்ளவா்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம். இந்த பயிற்சி முகாமில் சேரவிரும்பும் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சி முகாமில், கன்னடம் கற்றுத்தரும் போது ஏற்படும் சவால்கள், செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கற்றுத்தரப்படும். 


கன்னடம்-ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஆளுமை கொண்ட அடிப்படை பட்டப்படிப்பை பெற்றிருக்கும் யாா் வேண்டுமானாலும்,ஜன. 15, 16, 23-ஆம் தேதிகளில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளலாம். 

இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் 080-22286773, 9845299621, 8884211140 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு ஜன. 10-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain