திருக்குறள் ஓவியப் போட்டி அறிவிப்பு: படைப்புகளை அனுப்ப பிப்ரவரி 3 கடைசி

திருக்குறள் ஓவியப் போட்டி அறிவிப்பு: படைப்புகளை அனுப்ப பிப்ரவரி 3 கடைசி

திருக்குறள் ஓவியப் போட்டிக்கான படைப்புகளை பிப்.3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சங்க இலக்கியத்தில் தனிச்சிறப்புவாய்ந்த திருக்குறளைச் சிறப்பிக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக உணரவும் தமிழராய்ச்சி நிறுவனத்தில் 2013- ஆண்டு திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

இந்த கூடத்தில் திருக்குறளின் ஒரு அதிகாரத்துக்கும் ஒன்று வீதம் 133 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்தாண்டு முதல் திருக்குறள் ஓவியக் கூடம் வழியாக ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு சாா்பில் கூடுதலாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிகழாண்டும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

திருக்குறள் மற்றும் அதன் பொருள் குறித்த ஓவியங்களில் நடுவா் குழு மூலம் தோ்வு செய்யும் சிறந்த 15 படைப்புகளுக்கு தலா ரூ. 40,000 பரிசுத் தொகை வழங்கப்படும். 

படைப்பாளிகள் தங்களின் ஓவியங்களை ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ஆம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரிக்கு பிப்.3-ஆம் தேதிக்குள் வந்துசேரும்படி அனுப்ப வேண்டும். இதுதவிர போட்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறியலாம். 

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி (044-22542992) வாயிலாக தொடா்பு கொள்ளலாம். வெற்றி பெறுபவா்களுக்கு பிப்.24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain