ஆன்லைன் மூலமாக திருப்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டி

ஆன்லைன் மூலமாக திருப்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டி

online essay competition and Thiruppavai

ஆன்லைன் மூலமாக திருப்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டி

இளம் தலைமுறையினருக்கு ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பாவை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு பள்ளி மாணவர்களை வைத்து திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி வரும் 10ம் தேதி காலை 9 மணியளவில் ஆன்லைன் மூலம் நடைபெற இருக்கிறது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பாவை விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி போன்ற போட்டிகள் Zoom Google Meet மூலமாக நடைபெறும்.

இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 98408 88707 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஊக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி, 1ம் வகுப்பு திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை திருப்பாவையில் முதல் 10 பாசுரங்கள், 6 முதல் 8ம் வகுப்பு வரை திருப்பாவையில் முதல் 20 பாசுரங்கள் பாடலாம். 

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain